சட்டவிரோதமாக இந்தியா செல்ல முற்பட்ட 13 பேர் காங்கேசன்துறை கடற்பரப்பில் கைது

சட்டவிரோதமாக இந்தியா செல்ல முற்பட்ட 13 பேர் காங்கேசன்துறை கடற்பரப்பில் கைது

சட்டவிரோதமாக இந்தியா செல்ல முற்பட்ட 13 பேர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு படகொன்றில் பயணித்த 13 பேரும் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.

5 ஆண்கள், 3 பெண்கள், 5 குழந்தைகள் உள்ளிட்ட 13 பேரையும் பலாலி பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 3 ஆண்கள் , 3 பெண்கள் 5 சிறுவர்கள் மற்றும் யாழ்ப்பாணம் பலாலி பகுதியைச் சேர்ந்த படகோட்டிகளான 2 ஆண்களும் உள்ளடங்கலாக 13 பேர் யாழ்ப்பாணம் பலாலி கடற்பரப்பின் ஊடாக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இந்தியா நோக்கி படகொன்றில் பயணித்த வேளை கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே சட்டவிரோதமாக இந்தியாவிற்கு செல்ல முற்பட்ட நிலையில் மன்னாரில் கைது செய்யப்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

அத்தோடு பிளாஸ்டிக் படகும் இணைப்பு இயந்திரம் மற்றும் எரிபொருள் வகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன
 
கைது செய்யப்பட்ட 13 பேரையும் கடற்படையினர்  பலாலி பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image