புலம்பெயர் தொழிலாளர்களை இணைத்து 100,000 தொழில் முயற்சியாளர்களை உருவாக்க திட்டம்

புலம்பெயர் தொழிலாளர்களை இணைத்து 100,000 தொழில் முயற்சியாளர்களை உருவாக்க திட்டம்

வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கை திரும்பிய தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் தொழில்புரியும் தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களை இணைத்து 100,000 இலங்கை தொழில்முனைவோரை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது..

அதனை ஜூலை 07ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இணைந்து இந்த நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாகவும், நாட்டில் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கி ஊக்குவிப்பதற்கான அவசியத்தை குறிப்பாக விளக்கி அதற்கான ஏற்பாடுகள் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

ஜயகமு ஸ்ரீலங்கா அம்பாறை நிகழ்வினை நேற்று முன்தினம் (22) ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இணைந்து அமைச்சு இச்செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக அவர் இதன்போது  குறிப்பிட்டார்.

100,000 தொழில் முயற்சியாளர்களுக்கு முதல் சுயதொழில் உதவியாக 50,000 ரூபா வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image