உயர்நீதிமன்ற பரிந்துரைகளை கவனத்திற்கொள்ளாது நிகழ்நிலை காப்பு சட்டம் நிறைவேற்றம் - TISL நிறுவனம் கண்டனம்
"உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பல திருத்தங்களை கருத்திற் கொள்ளாமல் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற அரசாங்கம், பாராளுமன்றம், சட்டமா அதிபர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் மேற்கொண்ட சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைக்குTransparency International Sri Lanka நிறுவனம் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணான எந்தவொரு சட்டத்தையும் இயற்றுவதற்கு சட்டமியற்றும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக நீதிமன்றத்தின் உதவியை நாடுவதற்கு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு பாதுகாப்பை இது பாரதூரமாக மீறும் செயலாகும்.
பாராளுமன்றம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகார துஷ்பிரயோகம் செய்ததை வன்மையாகக் கண்டிப்பதோடு, இதனை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கோருகிறோம்".