வேட்புமனு தாக்கல்செய்து சம்பளமற்றிருக்கும் 7 ஆயிரத்துக்கும் அதிக அரச ஊழியர்களின் நிலை

வேட்புமனு தாக்கல்செய்து சம்பளமற்றிருக்கும் 7 ஆயிரத்துக்கும் அதிக அரச ஊழியர்களின் நிலை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 7 ஆயிரத்துக்கும் அதிகமான அரசாங்க ஊழியர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள சம்பளமற்றுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள சம்பளமற்றிருக்கும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டுமென எஸ்.பி.திசாநாயக்க எம்.பி. பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தேர்தலுக்கான முடிவு வரும் வரை அவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும், முன்பு ஒரு தடவையும் இவ்வாறு இடம்பெற்றுள்ளது என்றும் அவர் சபாநாயகரிடம் நேற்று (24) சபையில் சுட்டிக்காட்டினார்.

சபாநாயகர் அது தொடர்பில் பிரதமரிடம் கலந்துரையாடி, அவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அது தொடர்பில் அமைச்சரவை மூலம் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வது மிகவும் பொருத்தமானதென்றும் எஸ்.பி.திசாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

அது தொடர்பில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதனையடுத்து அது தொடர்பில் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எம்.பி., உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். அவர்களுக்கான சம்பளம் கிடைப்பதில்லை.

பல கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்களிலிருந்து இவர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். அந்த வகையில், தேர்தல் தொடர்பான முடிவு வரும் வரை காத்திருக்காமல், அவர்களுக்கு நிவாரணம் ஒன்று வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜயசுமனவும் இந்த விடயத்தை சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image