அரச உத்தியோகத்தர்களுக்கு இரண்டாம் மொழி பயிற்சிநெறி

அரச உத்தியோகத்தர்களுக்கு இரண்டாம் மொழி பயிற்சிநெறி

அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் அரச நியமனம் பெற்ற உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி பயிற்சிநெறி வகுப்புக்கள் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகிறது.

அதற்கமைவாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு 150 மணித்தியாலங்களை உள்ளடக்கிய இரண்டாம் மொழி பயிற்சிநெறி வகுப்புக்கள் கடந்த வருடம் கார்த்திகை மாதம் ஆரம்பிக்கப்பட்டு நேற்று (24) நிறைவடைந்தது

இக் கற்க்கை நெறியின் நிறைவு நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட தேசிய ஒருமைப்பாடு மேம்பாட்டு உதவியாளர் அ.தாமரைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட செயலக அரச கரும மொழிகள் பிரிவின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இக் கற்கை நெறியின் நிறைவு நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

இதன்போது இக் கற்கையினை வழங்கிய அரச கரும மொழிகள் திணைக்களத்தின் இரண்டாம் மொழி சிங்கள வளவாளர் செனவிரத்தின மாவட்ட அரசாங்க அதிபரால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image