6 வௌிநாட்டு மொழிகளை கற்பிக்க 500 ஆசிரியர்கள் நியமனம்

6 வௌிநாட்டு மொழிகளை கற்பிக்க 500 ஆசிரியர்கள் நியமனம்

கொரிய, ஜெர்மன், பிரெஞ்சு, ஹிந்தி, சீன மற்றும் ஜப்பானிய மொழிகளை கற்பிக்க 500க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள 19 கல்வியியல் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களாக மாற்ற எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயங்களை கூறியுள்ளார்.

கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றுவதுடன் அதன் மூலம் கல்வியியல் கல்லூரிகளில் இணையும் 5,000 மாணவர்களின் எண்ணிக்கையை 7,500 ஆக அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், விசேட தேவையுடைய பிள்ளைகளுக்காக பாடசாலைகளிலுள்ள வசதிகளை மேலும் உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் அவர்களுக்கு பயிற்றுவிக்க பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் இந்த மறுசீரமைப்பு பணிகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர்  சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image