நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 6,000 ஐ கடந்தது

நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 6,000 ஐ கடந்தது

இலங்கையில் கொவிட்-19 தொற்றால் மரணித்தோர் எண்ணிக்கை 6,000 ஐ கடந்தது. 

 
மேலும் 161 பேரின் மரணங்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று முன்தினம் உறுதிப்படுத்தப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 96 ஆக அதிகரித்துள்ளது.
 
30 வயதிற்கு உட்பட்ட பெண் ஒருவரின் மரணம் பதிவாகியுள்ளது.
 
30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 22 ஆண்களும், 16 பெண்களும் மரணித்தனர்.
 
60 வயதிற்கு மேற்பட்ட 122 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன.
 
61 ஆண்களினதும், 61 பெண்களினதும் மரணங்கள் இவ்வாறு பதிவானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
இதேவேளை, நாட்டில் நேற்று 3 ஆயிரத்து 435 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
 
அவர்கள் அனைவரும் புத்தாண்டு கொத்தணியில் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை, 354,968 ஆக அதிகரித்துள்ளது.
 
இதேவேளை, கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 2 ஆயிரத்து 387 பேர் குணமடைந்தனர்.
 
இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 309,732 ஆக அதிகரித்துள்ளது.
 
அத்துடன், வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கையும், 39,301 ஆக உயர்வடைந்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image