எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் பதுளை மாவட்டத்தில் இழுத்தடிப்பு செய்யப்படும் ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கப்படவுள்ளது.
பதுளை மாவட்ட அபிவிருத்தி குழுவில் தாம் இந்த விடயத்தை சுட்டிகாட்டியதற்கமைய மேற்படி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்த குமார் கூறியுள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அ.அரவிந்த குமார்.
பதுளை மாவட்டத்திற்கு 925 ஆசிரியர் உதவியாளர் நியமனம் கடந்த 2005 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதில் 654 நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளன. எனினும் 271 பேருக்கு நியமனம் வழங்கப்படாது இழுத்தடிப்பு செய்யப்பட்டு வந்தது. தகுதியானவர்கள் தற்போது சகல நிபந்தனைகளையும் பூர்த்தி செய்துள்ளனர். எனினும் அவர்களுக்கான நியமனம் இதுவரை வழங்கப்படவில்லை.
இது தொடர்பில் பதுளை மாவட்ட செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தேன். அதன்படி மீதமாய் உள்ள 271 பேருக்கும் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நியமனம் வழங்கப்படும் என ஊவா மாகாண கல்வியமைச்சின் செயலாளர் உறுதியளித்துள்ளார். என்றார்.
மூலம் - அததெரண