ஆசிரியர் நியமனத்தை எதிர்பார்க்கும் பட்டதாரிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நற்செய்தி
ஆசிரியர் சேவையில் இணைய எதிர்பார்த்து காத்திருக்கும் பயிலுநர் பட்டதாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்திபெற்றவர்கள் ஆகியோருக்கு மிகவும் முக்கியமான அறிவித்தலை, அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை நிலையத்தின் பிரதான செயலாளர் சந்திர சூரிய ஆராய்ச்சி வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை மத்திய நிலையம், தேசிய மற்றும் மாகாண பாடசாலைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தோர் ஒன்றியம் என்பன இணைந்து எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளன. அத்துடன் ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றை கையளிக்கவும் எதிர்பார்க்கின்றோம்.
இந்த செயற்பாட்டுக்கு அமைவான காரணங்களாக,
தற்போது நாட்டில் சுமார் 60,000 ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. எனினும் 2018 2019 2020 ஆம் ஆண்டுக்கான அரச சேவைக்கு ஆட்சி எடுக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அதிகபட்சமாக 22,000 பேரை வரையறுத்து ஆட்சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே அந்த 22,000 பேரை ஆட்சேர்ப்பதுடன், 60,000 வெற்றிடம் நிலவுகின்றமையால், பாடசாலைகளில் இதுபோன்று அநீதி இழைக்கப்பட்ட பட்டதாரிகள் இருக்கின்றனர். அந்த எண்ணிக்கையிலானோருக்கு சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொள்வதே எமது அடிப்படை நோக்கமாகும்.
வேலைத்தளத்தின் ஏனைய செய்திகளையும் வாசியுங்கள்
1999ஆம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையில் தேசிய பாடசாலை மற்றும் மாகாண பாடசாலைகளில் சேவையில் ஈடுபட வேண்டிய, பல வருடங்களாக கல்வி மற்றும் கல்விசாரா நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள, ஆசிரியர் சேவைக்கு விருப்பம் தெரிவிக்கும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்த்தல்.
அதேபோன்று வடமேல், மேல், தென் மற்றும் மத்திய மாகாணங்கள் உள்ளிட்டு அனைத்து மாகாண சபைகளிலும் இடம்பெற்ற ஆசிரியர் பரீட்சையில் சித்தியடைந்த பட்டதாரிகள், வேறு அரச சேவையில் ஈடுபடுவதனால் ஆட்சேர்க்கப்படவில்லை. எனவே அந்த நிபந்தனையின் அடிப்படையில் அநீதி இழைக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுத்தல்.
அதேநேரம் தற்போது ஆட்சேர்ப்ப தீர்மானிக்கப்பட்ட 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரையான பட்டதாரிகளை ஆட்சேர்க்கும்போது, 2019.12.31 அன்று 35 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் என அரசாங்கம் நிபந்தனை விதித்துள்ளது. இந்த நிபந்தனையின் காரணமாக ஆச்சரியப்பட்டாலும், பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்படும்.
நாங்கள் ஜனாதிபதிக்கு இந்த பிரச்சனையை முன்வைக்கின்றோம். கல்வி அமைச்சர்கல்வியமைச்சின் செயலாளர் ஆகியோருடன் இந்தப் ப்pரச்சினைகளைத் தீர்க்க நாங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்தோம். ஆனால் தீர்வு கிடைக்கவில்லை.
அமைச்சரவை இதற்கான தீர்மானம் எடுக்குமாயின், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் என கல்வி அமைச்சின் அதிகாரிகள் கூறுகின்றனர்.
எனவே, ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவைக்கும் மற்றும் பொறுப்புவாய்ந்த அமைச்சரினதும் அவதானத்துக்கு கொண்டுசெல்லும் நோக்கில் எதிர்வரும் 21 ஆம் திகதி முற்பகல் 11 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக போராட்டம் இடம்பெறும். இந்த போராட்டத்தில் பங்கேற்குமாறு நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம். – எனத் தெரிவித்துள்ளார்