2519 தாதியர்கள் சுகாதார சேவையில் இணைப்பு

2519 தாதியர்கள் சுகாதார சேவையில் இணைப்பு

2519 தாதியர்கள் அரச சுகாதார சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் , சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரணவின் பங்குபற்றலுடன் நேற்று வெள்ளிக்கிழமை (17)  அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் மற்றும் அமைச்சரால் குறித்த தாதியர்களுக்கு நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

நிழ்வில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண, 

1948 ஆம் ஆண்டில், பதிவு செய்யப்பட்ட வைத்தியர்கள் உட்பட 400 வைத்தியர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட எமது சுகாதாரத்துறையில் சுமார் 300 தாதியர்கள் இருந்தனர். 75 வருடங்களில் இலங்கையின் சுகாதாரத் துறையானது 43,000 தாதிகள், 23,000 வைத்திய அதிகாரிகள் மற்றும் 8,000 துணை வைத்தியர்கள் உட்பட 100,000 பேரைக் கொண்ட பாரிய துறையாக வளர்ச்சியடைந்துள்ளது.

இத்துறை சிறந்த சேவைகளை வழங்கும் தொழில்சார் சேவையாக மாறியுள்ளதுடன், அதன் பரிணாம வளர்ச்சியுடன், குறைந்த செலவில் உலகில் சிறந்த தரமான சுகாதார சேவைகளை வழங்கும் மத்திய நிலையமாக இன்று இலங்கை அடிக்கடி உலக சுகாதார ஸ்தாபனத்தினால் குறிப்பிடப்படுகின்றது. சேவை மற்றும் சுகாதார ஊழியர்களின் ஒத்துழைப்பு அந்த பெருமைக்கு உரியதாகும் என்றார். 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image