அடுத்த ஆண்டில் அரச மற்றும் வங்கித்துறைகளுக்கான விடுமுறைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் அரச மற்றும் வங்கித்துறைகளுக்கு 25 விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
பிரதமரும், அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சருமான தினேஸ் குணவர்தனவின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.