இலங்கை மற்றும் இஸ்ரேல் இடையிலான அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
ஈரானின் தாக்குதல் காரணமாக டெல் அவிவ் விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முந்தைய நாட்களில் இருநாடுகளுக்கும் இடையே விமானப் பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோர், அதனை பிறிதொரு நாளில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் எதிர்காலத்தில் ஏதேனும் அபாயகரமான சூழ்நிலை ஏற்படுமாயின் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தூதரகம் கூறியுள்ளது.
இயன்றவரை பயணங்களை குறைத்து வீட்டிலேயே இருக்குமாறு இஸ்ரேல் அரசாங்கம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
எதிர்காலத்தில் இடம்பெறும் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதற்காக நிலத்தடி முகாம்கள், நிலத்தடி வைத்தியசாலைகள் மற்றும் அவசர அம்பியூலன்ஸ் சேவைகளை ஏற்படுத்தியுள்ளதாக இஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மூலம் - நியூஸ்பெஸ்ட்