15 மாதங்களின் பின் 300 ரூபாவை விட குறைந்த டொலரின் பெறுமதி!

15 மாதங்களின் பின் 300 ரூபாவை விட குறைந்த டொலரின் பெறுமதி!
அமெரிக்க டொலரின் இன்றைய விற்பனைப் பெறுமதி 300 ரூபாவை விடவும் குறைவடைந்துள்ளது.
 
இலங்கை மத்திய வங்கி இன்று (02) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 290 ரூபாய் 30 சதம், விற்பனைப் பெறுமதி 299 ரூபாய் 35 சதமாகவும் பதிவாகியுள்ளது. 
 
கடந்த 2023 ஆண்டு ஜூன் 8 ஆம் திகதி அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி 298.91 ரூபாவாக காணப்பட்டது. 
 
இந்தநிலையில் 15 மாதங்களின் பின்னர் அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி ரூ 300ஐ விட வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image