அரச ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து பாராளுமன்றில் வெளியிடப்பட்ட தகவல்

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து பாராளுமன்றில் வெளியிடப்பட்ட தகவல்
அரச ஊழியர்களின் சம்பள நடைமுறை குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இன்று (21) பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார். 
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், 
 
எதிர்கால சம்பள உயர்வு என்பது திட்டமிடலின் அடிப்படையில் மேற்கொண்டு வரும் நடவடிக்கையாகும். மக்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் அவர்களின் நிலையை மேம்படுத்த வேண்டும். 
 
சம்பள உயர்வு எதிர்காலத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் உதய ஆர் செனவிரட்ன தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அந்த இடைக்கால அறிக்கைக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.  தற்போது வழங்கப்படுகின்ற அனைத்து வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுகளையும் சேர்த்து அரச ஊழியர்களுக்கு 25,000 வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என அந்த இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், திறைசேரியும் 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் திட்டத்தில் இந்த யோசனையை அங்கீகரித்து அதனை வழங்குவதற்கு தேவையான திட்டமிடலும் மேற்கொண்டுள்ளது.
 
அரச ஊழியர்கள் அடிப்படை சம்பளத்திற்கு நூற்றுக்கு 24% அதிகரிப்பும், 34% உச்சபட்ச எல்லை வரம்பிலும் அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் முகாமைத்துவம் மற்றும் கணக்கிடலின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களாகும். - என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image