பாரபட்சமின்றி தொழில் வழங்கக்கோரி யாழில் பட்டதாரிகள் போராட்டம்

பாரபட்சமின்றி தொழில் வழங்கக்கோரி யாழில் பட்டதாரிகள் போராட்டம்
வடக்கு மாகாண பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்னாபாக கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
 
நேற்று இடம்பெற்ற இந்தப் போராட்டம் தேங்காய் உடைத்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென இதன்போது வேலையில்லா பட்டதாரிகள் வலியுறுத்தியிருந்தனர்.
 
இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “பட்டம் வீட்டில் பட்டதாரிகள் நடு ரோட்டில், ஒரே ஒரு பரீட்சையில் பறந்து போனது பல பரீட்சை எழுதிப் பெற்ற பட்டம், வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், எமக்கான வாழ்க்கையை நாம் எப்போது வாழ்வது?, படிப்பிற்க்கும் போராட்டம் வேலைக்கும் போராடுவதா?, எல்லோருக்கும் பாரபட்சமின்றி வேலைகளை வழங்க வேண்டும், படித்ததக்கு கூலிதொழிலா கடைசி வரைக்கும்?, படித்தவர்கள் இந்த நாட்டின் சாபக்கேடுகளா?, பல வருட கனவு வெறும் கனவாகவே போய்விடுமா?, படித்தும் பரதேசிகளாக திரிவதா?” என பல்வேறுப்பட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
 
அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 
Jaffna_unempoly_03.jpg
 
Jaffna_unempoly_02.jpg
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image