தேயிலையை விற்று செலுத்தப்படும் எண்ணெய் கடன்

தேயிலையை விற்று செலுத்தப்படும் எண்ணெய் கடன்

ஈரானிடமிருந்து எண்ணெயைப் பெற்றுக்கொள்வதற்காக செலுத்தப்படவேண்டிய கடன் தொகையில், தேயிலையில் விற்பனை மூலம் இதுவரையில், 55 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (15) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே மேற்கண்ட தகவலை வெளியிட்ட அவர், இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

“ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், தேயிலை ஏற்றுமதியின் ஊடாக ஈரானுக்குச் செலுத்த வேண்டிய எண்ணெய்க்கான கடனை இலங்கை கடந்த வருடம் ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் செலுத்த ஆரம்பித்துள்ளது.

அந்த உடன்படிக்கையின் கீழ், தேயிலை ஏற்றுமதியின் மூலம் பெற்றோலியத்துக்காக ஈரானுக்குச் செலுத்த வேண்டிய 250.9 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்த எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கடனில் இதுவரை 55 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ளது. 2024 இன் முதல் 4 மாதங்களில், 4.1 மில்லியன் கிலோ தேயிலை ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது, இது 2023 இன் முதல் 4 மாதங்களில் ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் அளவை விட மூன்று மடங்கு அதிகமாகும்.” - என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image