அடக்குமுறைக்கு உட்படுத்தினால் தொடர் வேலைநிறுத்தம் - ரயில் நிலைய அதிபர் சங்கம் பதில்

அடக்குமுறைக்கு உட்படுத்தினால் தொடர் வேலைநிறுத்தம் - ரயில் நிலைய அதிபர் சங்கம் பதில்

ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு தொடர்பில் ரயில்வே பொது முகாமையாளரினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை கடிதத்திற்கு இலங்கை ரயில் நிலைய அதிபர் சங்கம் பதிலளித்துள்ளது.

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளை நேரடியாகப் பாதிக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகஇ 2024 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்பட்ட வாய்மொழி வாக்குறுதியானதுஇ நிறைவேற்றப்படாத காரணத்தினால் இந்த தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்கிய வர்த்தமானி வெளியிட்டுள்ள போர்வையில் புகையிரத தொழிற்சங்கங்களை அடக்குமுறை செய்யவோ  அல்லது அச்சுறுத்தவோ செயற்பட்டால் ஏனைய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட நேரிடும் என்றும் அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image