பாடசாலை கல்விசாரா ஊழியர் சங்கத்தினர் இரு நாள் சுகயீன விடுமுறை போராட்டம்

பாடசாலை கல்விசாரா ஊழியர் சங்கத்தினர் இரு நாள் சுகயீன விடுமுறை போராட்டம்

தமது உறுப்பினர்கள் நாளை (24) மற்றும் நாளை மறுதினமும் (25) சுகயீன விடுமுறையை அறிவித்து பணிக்கு சமூகமளிக்க மாட்டார்கள் என கல்வி மற்றும் கல்விசாரா தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கல்வி சாரா ஊழியர்கள் நாளையும் நாளை மறுதினமும் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கல்வி சாரா ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் அஜித் கே திலகரத்ன தெரிவித்துள்ளார். 

கண்டியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தம்மால் இதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட 80 கோரிக்கைகளையும் அரசாங்கம் ஒரு சதத்துக்கேனும் கவனத்தில் கொள்ளவில்லை. கல்வித்துறைகளிலுள்ள 30,000 கல்வி சாரா ஊழியர்களுக்காக 10 கொள்கைகள் நடைமுறையிலுள்ளன. ஒவ்வொரு மாகாணங்களிலும் ஒவ்வொரு கொள்கைகள் பின்பற்றப்படுவதால் தாம் பாரிய சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, எதிர்கொண்டுள்ள இவ்வாறாக பிரச்சினைகளுக்கான தீர்வினை வலியுறுத்தியே தாம் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image