சம்பள நிர்ணய சபையின் கூட்டத்தை மீண்டும் புறக்கணித்தது முதலாளிமார் சம்மேளனம்!

சம்பள நிர்ணய சபையின் கூட்டத்தை மீண்டும் புறக்கணித்தது முதலாளிமார் சம்மேளனம்!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இரண்டாவது முறையாக இன்றைய தினம் இடம்பெற்ற சம்பள நிர்ணய சபை கூட்டத்தை முதலாளிமார் சம்மேளனம் புறக்கணித்துள்ளது.
இன்று முற்பகல் 10 மணிக்கு தேயிலை தொழிலாளர்களுக்கான சம்பளம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சம்பள நிர்ணய சபை தொழில் ஆணையாளர் தலைமையில் கூடியது, இறுதியாக கடந்த 10ஆம் திகதி சம்பள நிர்ணய சபை கூடியது.

அன்றைய தினம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. எனினும் முதலாளிமார் சம்மேளனம் குறித்த வாக்கெடுப்பை அன்றைய தினம் புறக்கணித்திருந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் இரண்டாவது தடவையாகவும் வேதன நிர்ணய சபை கூடியிருந்த நிலையில், முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் குறித்த கூட்டத்தை புறக்கணித்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
 
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image