நிகழ்நிலை காப்பு சட்டத்தில் புதிய திருத்தங்களை உள்ளடக்க ஒரு மாத காலம் தேவை - நீதி அமைச்சு

நிகழ்நிலை காப்பு சட்டத்தில் புதிய திருத்தங்களை உள்ளடக்க ஒரு மாத காலம் தேவை - நீதி அமைச்சு

நிகழ்நிலை காப்பு சட்டத்தில்(Online Safety Bill) புதிய திருத்தங்களை உள்ளடக்க மேலும் ஒரு மாத காலம் தேவைப்படுவதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் உரிய திருத்தங்கள் சமர்ப்பிக்கப்படுமென நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் முன்வைத்த பிரேரணையின் பிரகாரம், நேற்று(13) கூடிய அமைச்சரவை குழுவில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் 30-இற்கும் மேற்பட்ட திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடக வலையமைப்புகளுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய நாட்களில் பல தரப்பினரும் இந்த சட்டத்தின் பல பிரிவுகளை விமர்சித்திருந்தனர்.

எனினும் பெப்ரவரி முதலாம் திகதி பாராளுமன்றத்தில் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது

மூலம் - நியூஸ்பெஸ்ட் தமிழ்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image