ஓய்வூதியர்களின் சங்க ஒன்றியம் இன்று கொழும்பில் போராட்டம்

ஓய்வூதியர்களின் சங்க ஒன்றியம் இன்று கொழும்பில் போராட்டம்

நான்கு கோரிக்கைகளை முன்வைத்து  கொழும்பில் இன்று போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஓய்வுபெற்றவர்களின் சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இன்று மதியம் 12 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

ஓய்வூதியர்களுக்கு 2500 ரூபாய் அல்லாமல் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவினை வழங்க வேண்டும் 70 வீதம் ஜனவரி மாதத்தில் இருந்து வழங்கப்பட வேண்டும்.

அரசு நிர்வாக சுற்றறிக்கை 35/2019(1) , 2020.01.20 ஆகியவற்றின் ஊடாக இடைநிறுத்தப்பட்ட ஓய்வூதிய சம்பளம் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

அரசு நிர்வாக சுற்றறிக்கை 3/2016(iv) மற்றும் 2022.01.05 ஆகியவற்றின் ஊடாக திருத்தப்பட்ட ஆசிரியர் அதிபர்  கொடுப்பனவு, உரிய ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

அக்ரஹாரா ஓய்வூதியக் காப்புறுதி 2016 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வூதியம் பெற்றவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். 

என்ற 4 கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

May be an image of text

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image