18 வயதாகும் எந்த ஒரு நபரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் தம்மைப் பதிவு செய்து கொண்டு வரிசெலுத்துநர் அடையாள இலக்கத்தினை TIN (Taxpayer Identification Number) பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
2024 ஜனவரி முதலாம் தேதி முதல் அமுலாகும் வகையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், வரி மதிப்பீட்டு ஆண்டொன்றில் (ஏப்ரல் ஒன்று முதல் மார்ச் 31 வரை) ரூபா 12 லட்சத்திற்கும் அதிக வருமானத்தை கொண்டுள்ள ஆளொருவர் வருமான வரிக்கு பதிவுசெய்தல் வேண்டும்.
இந்தப் பதிவினை பெற்றுக்கொள்ளாத ஆளொருவர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பதிவு செய்யப்படுவார். அத்துடன், அவர் ரூபாய் 50 ஆயிரத்திற்கு விஞ்ஞாத தண்டத்திற்கு உள்ளாதல் வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.