ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கத்தினர் கொழும்பில் போராட்டம்

ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கத்தினர் கொழும்பில் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க  சம்மேளனத்தினர் பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

*சம்பள விடயத்தில் எஞ்சியுள்ள 2/3 பங்கை வழங்க வேண்டும்.
*20000 ரூபாய் வாழ்க்கை செலவு கொடுப்பானவை வழங்க வேண்டும். *பாடசாலைகளை முன்கொண்டு செல்வதற்கான சுமையை பெற்றோர்களிடமிருந்து விடுவிக்க வேண்டும். *கல்விக்கு 6% நிதியை ஒதுக்க வேண்டும்.
*கல்வியை விற்பதை நிறுத்த வேண்டும்.

முதலான கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பினர்  பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் வீதியில் நேற்று (05) எதிர்ப்பில் ஈடுபட்டனர். 

ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க ஆகியோருக்கு எதிராக குறித்த எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில் நீதிமன்ற உத்தரவொன்றும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அமைதியான முறையில் எதிர்ப்பில் ஈடுபடுவதற்கும் கருத்துகளை வௌியிடுவதற்கான சுதந்திரத்திற்கும் குறித்த உத்தரவினால் இடையூறு ஏற்படாது எனவும் கொழும்பு மேலதிக நீதவான் தமது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் பேரணியாக பாராளுமன்றம் நோக்கிச் செல்வதற்கு முயற்சித்ததுடன், பொலிஸாரும் கலகத்தடுப்புப் பிரிவினரும் அவர்களை தடுத்தனர்.

பின்னர் அவர்கள் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டு கலைந்து சென்றனர்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image