வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (21) நடைபெறவுள்ளது. 

வரவு செலவுத் திட்ட முன்மொழிவு, நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த 13 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

கடந்த 14ஆம் திகதி முதல் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்று வருகின்ற நிலையில், 7 ஆவது நாளான இன்றும் இடம்பெற்று, இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5.30 அளவில் நடைபெறவுள்ளது.

வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் அல்லது வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு விவாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 13 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13 ஆம் திகதி மாலை இடம்பெறவுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image