உத்தேச மின்சக்தி துறை மறுசீரமைப்பு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி
உத்தேச மின்சக்தி துறை மறுசீரமைப்பு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
புதிய சட்டமூலத்தை வர்த்தமானியில் வௌியிட்டு, நிறைவேற்றிக் கொள்வதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது X வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, பாராளுமன்றத்தின் அங்கீகாரம் பெறப்பட்டதன் பின்னர் இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்படவுள்ளதுடன், மின்னுற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகம் ஆகியன தனியார் துறையின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படவுள்ளது.