டெங்கு நோய் கட்டுப்பாட்டு பணிகளில் இருந்து விலகவுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள்

டெங்கு நோய் கட்டுப்பாட்டு பணிகளில் இருந்து விலகவுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள்
அனைத்து டெங்கு நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இருந்து விலகுவதற்கு பொது சுகாதார பரிசோதர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள்  அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.
 
பொது சுகாதார பரிசோதகர்கள் தற்போது ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையை சுகாதார அமைச்சு அல்லது பொறுப்புவாய்ந்த எந்த ஒரு அதிகாரியும் கவனத்தில் கொள்ளாமை காரணமாக இந்த தீர்மானம் எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

போக்குவரத்து கொடுப்பனவு அதிகரிக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு தொழில்சார் சிக்கல்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென கோரி அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 

கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் இந்த சிக்கல்களுக்கு தீர்வு வழங்குமாறு கோரி பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததாக இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் ஷானக போபிட்டிய தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image