நுவரெலியா தபால் நிலையத்தை விற்பனை செய்வதற்கு எதிராக போராட்டம்

நுவரெலியா தபால் நிலையத்தை விற்பனை செய்வதற்கு எதிராக போராட்டம்

நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்காக விற்பனை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக நேற்று (09) பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நுவரெலியா பிரதான நகரின் மத்தியில் அமைந்துள்ள விலைமதிப்பற்ற வளமாக கருதப்பட்ட நுவரெலியா தபால் நிலையத்தை தாஜ் சமுத்ரா ஹோட்டல் நிறுவனத்துக்கு ஒப்படைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா துறைக்காக வழங்குவதற்கு தாம் இணக்கம் தெரிவிப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


 

இதற்கு பலரும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தில் தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள், சிவில் செயற்பாட்டாளர்கள் , சட்டத்தரணிகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஏராளமான தபால் நிலைய ஊழியர்கள் பெருமளவிலானவர்கள் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image