பொது சுகாதார பரிசோதகர்கள் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
போக்குவரத்து கொடுப்பனவை அதிகரித்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
நாடளாவிய ரீதியில் 2,400 அதிகாரிகள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.போபிட்டிய தெரிவித்துள்ளார்.
தமது பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதற்கான தீர்வு கிடைக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார செயலருக்கும் தமது கோரிக்கை அறியப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று முன்னெடுக்கப்படுகின்ற இந்த தொழிற்சங்க நடவடிக்கை, புற்றுநோய் வைத்தியசாலை, சிறுவர் வைத்தியசாலைகளில் இடம்பெற மாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்தியாவசிய சேவைகளுக்கான பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் இலங்கை பொது சுகாதார பரிசோதர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.போபிட்டிய தெரிவித்துள்ளார்.