அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (11) கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்னால் இன்று முற்பகல் 11.30 மணி முதல் இந்த எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு இதுவரை தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
வாழ்க்கை செலவுகளுக்கு ஏற்ற வகையில், வைத்தியர்களுக்கான சம்பளத்தை வழங்கும் நடைமுறையை தயாரித்தல், வழங்கப்படும் எரிபொருளின் அளவை அதிகரித்தல், சம்பளத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அவற்றுள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.