ரயில்வே சாரதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது

ரயில்வே சாரதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது

ரயில்வே இயந்திர சாரதிகள் கடந்த 11ஆம் திகதி முதல் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு நேற்று (13) மாலை கைவிடப்பட்டது.

5 வருடங்களாக தாமதமாகியுள்ள தரமுயர்வை விரைவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே இயந்திர சாரதிகள்  பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

நேற்று மாலை ரயில்வே திணைக்கள அதிகாரிகள் மற்றும் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டவர்களுக்கு மத்தியில் இடம்பெற்ற சந்திப்பின்போது சாதகமான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதை அடுத்து பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image