பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய தேசிய ஆணைக்குழு அமைக்கப்படவேண்டும்

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய தேசிய ஆணைக்குழு அமைக்கப்படவேண்டும்

பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை பாதுகாக்க அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய தேசிய ஆணைக்குழு அமைக்கப்படவேண்டும். 

தேசிய ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த ஜனாதிபதி செயலணி ஒன்றை ஏற்படுத்த வேண்டும். தற்போதேய அரசாங்கத்துக்கு இதனை செய்ய முடியாது என்றாலும் எதிர்காலத்தில் உருவாக இருக்கும் எமது அரசாங்கத்தில் இதனை முன்னெடுக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பெருந்தோட்ட மக்கள் தொடர்பாக அரசாங்கத்திடம் தெளிவான புள்ளவிபரம் எதுவும் இல்லை. அரசாங்கத்தின் அஸ்வெசும திட்டம் வீழ்ச்சியடைய காரணமானதும் நாட்டு மக்கள் தொடர்பாக சரியான புள்ளிவிபரம் இல்லாமையாகும். அதனால் அரசாங்கம் பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரம் தொடர்பாக முறையான புள்ளிவிரம் ஒன்றை மேற்கொள்ளவேண்டும்.

என்றாலும்  உத்தியோகபூர்வமற்ற தகல்களிள் பிரகாரம் பெருந்தோட்ட மக்களில் பொருளாதார ரீதியில் செயற்படும் 4இலட்சம் பேரும் பொருளாதார ரீதியில் செயற்படாத 3இலட்சம் பெரும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. என்றாலும் முறையான புள்ளிவிபரம் ஒன்றை பெற்றுக்கொண்டு பெருந்தோட்ட மக்களின் நிலைமை தொடர்பாக தெளிவொன்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அத்துடன் பெருந்தோட்ட மக்கள் எதிர்காெண்டுவரும் பாரிய பிரச்சினைகள் இருக்கின்றன. சுகாதாரத்துறையை பார்த்தால், சுகாதாரத்துறை கட்டமைப்பில் பிரச்சினை இருக்கிறது. வைத்தியசாலைகளில் நோய் நிவாரணங்களில் பிரச்சினை இருந்து வருகிறது.

இலவசக் கல்விக்கான அணுகல் மிகவும் பலவீன மட்டத்திலேயே உள்ளது. அதேபோன்று அடிப்படை வசதிகள் மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கின்றன. பெருந்தோட்ட மக்களின் கல்வித்துறை தேசிய கல்வித்துறைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டது 1958ஆகும். அதுவரைக்கும் தாேட்ட மக்கள் ஒதுக்கப்பட்ட சமூகமாகவே இருந்துவந்தது.

1919 புள்ளிவிபரத்தின் பிரகாரம் பெருந்தோட்ட பிள்ளைகளில் 12வீதமானவர்களே சாதாரண தரத்தில் சித்தியடைந்துள்ளனர். ஏனைய மாணவர்கள் 8, 10ஆம் தரம் வரையே கல்வி கற்கின்றனர். இது மிகவும் கவலைக்குரிய  விடயமாகும்.

அதனால் பெருந்தோட்ட பிரதேசதங்களில் கல்வி, சுகாதார துறைகளில் பாரிய மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். அதிக ஒதுக்கீடுகளை இந்த பிரதேசங்களுக்கு வழங்கி கல்வி மற்றும் சுகாதாரத்துறையை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தோட்ட மக்கள் வாழும் மாவட்டங்களில் குறைந்த பிரதேச செயலகங்களே அமைக்கப்பட்டுள்ளன. குறைந்த கிராமசேவகர் தொகுதிளே இருக்கின்றன.இவை அதிகரிக்கப்பட வேண்டி இருக்கின்றன. 

மேலும் எமது தொழில் சட்டத்தில்  சர்வதேச தொழில் சட்டத்துக்கு பொருந்தாமல் இருக்கும் . இடங்கள் இருக்கின்றன.அதன் மூலம் பாதிக்கப்படும் தோட்ட மக்கள் பாரியளவில் இருக்கி்ன்றன. தமிழ் மொழி மூலமான அரச அதிகாரிகள் மிகவும் குறைந்தளவிலேயே இருக்கின்றனர. இதனை சரிசெய்துகொள்ள வேண்டும்.

1994 மற்றும் 2019 ஆண்டுகளில் தேர்தல்களின்போது, ஆட்சிக்கு வந்தால் தோட்ட மக்களின் வாழ்க்கையை போஷிப்பதாக தெரிவித்தார்கள். இப்போதும் தோட்ட மக்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக்கியதாக தெரிவிக்கின்றனர். ஆனால் ஏனைய கொடுப்பனவுகளுனேயே ஆயிரம் ரூபாவ வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தோட்டத்துறையில் வீட்டு பிரச்சினையை தீர்க்க முடியாமல் போனமை தொடர்பில் அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக்கூற வேண்டும். தோட்ட மக்களில் நுவரெலியா மாவட்டத்திலே நூற்றுக்கு 51வீதமானவர்கள் இருக்கின்றனர். அடுத்த படியாக ஊவா மாகாணத்தில் 18,5 வீதமானவர்கள் இருக்கின்றனர்.

இவர்களின் வீட்டுப்பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். எமது அரசாங்கத்தில் லயன் அறையில் இருக்கும் தோட்ட மக்களுக்கு வாழ்வதற்கு வீட்டுடன் பயிர்ச்செய்ய காணியும் வழங்கி அவர்களை சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களாக்குவோம்.ஆனால் ஆளும் கட்சியில் இருப்பவர்கள் தோட்ட மக்களுக்கு சிறு தேயிலை தோட்ட உரிமை வழங்குவதை இனவாதமாக மாற்றி அதனை தடுத்து நிறுத்தினர்.

அதேபோன்று தோட்ட மக்கள் வறுமை நிலையில் வாழ்கின்றனர். அவர்களின் வறுமை நிலையை போக்க பயிர் செய்ய காணிகளை வழங்கி, அவர்கள் சுயமாக பயிரிட இடமளிக்கவேண்டும். எனவே இந்திய வம்சாவளி மக்களாக அந்த தோட்ட மக்களுக்கு பிரஜா உரிமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்ததுபோன்று அவர்களின் எனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தேவையான புதிய சட்டங்களை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை பாதுகாக்க அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய தேசிய ஆணைக்குழு அமைக்கப்படவேண்டும். தேசிய ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைக்க வேண்டும். தற்போதே அரசாங்கத்துக்கு இதனை செய்ய முடியாது என்றாலும் எதிர்காலத்தில் உருவாக இருக்கும் எமது அரசாங்கத்தில் இதனை முன்னெடுக்க நடவடி்கை எடுப்போம் என்றார்.

மூலம் - வீரகேசரி

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image