உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை

உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக மேலும் அவசியமாக உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக மேலும் 6000 ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதிப்பீட்டு கடமைகளுக்காக இதுவரை சுமார் 13000 விண்ணப்பங்கள் மாத்திரமே கிடைத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டார்.

விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக 19000 ஆசிரியர்கள் தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கியமாக விஞ்ஞானப் பாடப்பிரிவின் மதிப்பீட்டு பணிகளுக்கே ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

விடைத்தாள் மதிப்பீடு பணிகளுக்காக விண்ணப்பங்களை அனுப்புவதற்கு மேலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால அவகாசம் எதிர்வரும் 8ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், தற்போதைய சூழலை கருத்திற்கொண்டு குறித்த கால அவகாசம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image