அனைத்து பிரஜைகளுக்கும் ஒன்றுகூடுதல் மற்றும் கருத்து சுதந்திரம் உண்டு

அனைத்து பிரஜைகளுக்கும் ஒன்றுகூடுதல் மற்றும் கருத்து சுதந்திரம் உண்டு

ஜனநாயக நாடான இலங்கையில் அனைத்து பிரஜைகளுக்கும் ஒன்றுகூடுதல் மற்றும் கருத்துகளை வௌியிடுவதற்கான சுதந்திரம் காணப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த உரிமை தொழிற்சங்கங்கள், தொழிற்சங்க அமைப்புகள், மாணவர்கள் மற்றும் தனி நபர்கள் உள்ளிட்ட நாட்டின் வெவ்வேறு தரப்பினருக்கும் பொருந்துமென ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதுபோன்ற உரிமைகள் வௌிப்படுத்தப்பட்ட பல சந்தர்ப்பங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை மற்றும் தடிகளை பயன்படுத்தியதாக முறைப்பாடுகளும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் பொறுப்பான பிரதான அமைப்பாக எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நிலைமை குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும் என   இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், இந்த நிலைமை தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை ஆணைக்குழு ஆரம்பித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட எந்தவொரு பிரஜையையும் வரவழைத்து விசாரணை செய்வதற்கும் அவர்களிடமுள்ள ஆவணங்களைச் சரிபார்த்தல் உட்பட விசாரணை செய்வதற்கும் தமக்கு சட்டபூர்வ அதிகாரம் உள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இதன்போது வலியுறுத்தியுள்ளது.

மூலம் - நியூஸ்பெஸ்ட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image