பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் விடயம் தொடர்பான புதிய தகவல்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் புதிய தகவல் ஒன்றை வௌியிட்டுள்ளார்.
மாத்தளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இது குறித்து கருத்து வௌியிட்ட அவர்,
1000 ரூபா சம்பள உயர்வின் பின்னர், தொழிற்சங்கங்களுக்கும், கம்பனிகளுக்கும் இடையில் முரண்பாடு நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி முரண்பட்டு பயணிக்கவும் முடியாது.
கூட்டு ஒப்பந்தத்துக்கு வருகின்றோம் என கூறும் கம்பனிகள், முதுகுக்கு பின்னால் வேறொன்றை செய்கின்றது. வழக்கு தொடுக்க முற்படுகின்றது.
அரசுடன் பேச்சு நடத்தி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்குவதற்கு கம்பனிகளுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகின்றோம்.
இந்த வாய்ப்பை கம்பனிகள் தவறவிட்டால், நாம் சம்பள நிர்ணய சபைக்கு நிச்சயம் செல்வோம். 2 ஆயிரம் முதல் 2, 500 வரை சம்பள உயர்வு கோரப்படும்.