உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்ககோரும் மனு இன்று விசாரணைக்கு
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில், ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் டபிள்யூ. எம். ஆர். விஜேசுந்தர தாக்கல் செய்த மனு இன்று (20) உயர் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த மனு கடந்த 10 ஆம் திகதி அழைக்கப்பட்டபோது, மனுவை 23ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய குழாம் உத்தரவிட்டது.
எவ்வாறாயினும், அன்றைய திகதிக்கு முந்திய திகதியொன்றில்,அதனை பரிசீலிக்குமாறு மனுதாரர் நகர்த்தல் பத்திரம் மூலம் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி, உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை இன்று பரிசீலிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நிதிப்பற்றாக்குறை காரணமாக வாக்குறுதியளித்தபடி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்த முடியாது என உயர் நீதிமன்றத்துக்கு நகர்த்தல் பத்திரம் மூலம் அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
மூலம் - சூரியன் செய்திகள்