குடிநீர் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவித்தல்

குடிநீர் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவித்தல்

மின் கட்டணம் அதிகரிப்பட்டுள்ள நிலையில், குடிநீர் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.



செலவுகளை ஈடு செய்வதற்காக, மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளதாக அந்த சபையின் வணிகப் பிரிவு பிரதிப் பொதுமுகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார்.

நீரைப் பெற்றுக்கொண்டு, அதனை மக்களுக்கு விநியோகிக்கும் செயற்பாடுகளுக்காக, பாரிய அளவில் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.

எவ்வாறிருப்பினும், குடிநீர் கட்டண உயர்வு குறித்து, தற்போது வரையில், கொள்கை ரீதியில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

எனினும், செலவுகளை ஈடு செய்வதற்காக, வருடாந்தம் நீர் கட்டணத்தை திருத்த, கடந்த ஆண்டு அமைச்சரவை அனுமதி வழங்கியது.

2012 ஆம் ஆண்டின் கணக்கீட்டின் அடிப்படையில், 70 வீத அதிகரிப்பே கடந்த ஆண்டு கிடைத்தது.

இந்த நிலையில், செலவுகளை ஈடுசெய்வதற்கு, தற்போதைய வருமானம் போதமானதாக இல்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் வணிகப் பிரிவு பிரதிப் பொதுமுகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார்.

மூலம் - சூரியன் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image