மின் கட்டண உயர்வு அதிகளவில் யாரைப் பாதிக்கிறது?

மின் கட்டண உயர்வு அதிகளவில் யாரைப் பாதிக்கிறது?

மின் கட்டணம் 66 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 


இதன்படி, 0 முதல் 30 அலகுகள் வரையான மின் கட்டணம் 120 ரூபாவில் இருந்து, 400 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

31 முதல் 60 அலகுகள் வரையான மின் கட்டணம் 240 ரூபாவில் இருந்து, 550 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

61 முதல் 90 அலகுகள் வரையான மின் கட்டணம் 360 ரூபாவில் இருந்து, 650 ரூபா வரையில்  அதிகரிக்கப்பட்டுள்ளது.

91 முதல் 120 அலகுகள் வரையான மின் கட்டணம் 960 ரூபாவில் இருந்து, ஆயிரத்து 500 ரூபா வரையில்  அதிகரிக்கப்பட்டுள்ளது.

121 முதல் 180 அலகுகள் வரையான மின் கட்டணம் 960 ரூபாவில் இருந்து, ஆயிரத்து 500 ரூபா வரையில்  அதிகரிக்கப்பட்டுள்ளது.

180 இற்கும் மேற்பட்ட அலகுகளுக்கான கட்டணம், ஆயிரத்து 500 ரூபாவில் இருந்து, 2 ஆயிரம் ரூபா வரையில் உயர்த்தப்பட்டுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.


இதன்படி, 30 அலகுகள் வரையான மின் பாவணையாளர்களுக்கு, 214 ரூபாவாக உள்ள மின் கட்டணம் 453 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது நூற்றுக்கு 251 வீத அதிகரிப்பாகும்.

31 முதல் 60 வகையான அலகுகளுக்கு உட்பட்ட மின் பாவணையாளர்களுக்கு 677 ரூபாவாக இருந்த மின் கட்டணம் 2 ஆயிரத்து 178 ரூபாவாக அதிகரிக்கின்றது.

இது நூற்றுக்கு 221 வீத அதிகரிப்பாகும்.

61 முதல் 90 வரையான அலகுகளுக்கு உட்பட்ட மின் பாவனையாளர்களுக்குஈ, ஆயிரத்து 825 ரூபாவாக இருந்த கட்டணம் 9 ஆயிரத்து 370 ரூபா வரையில் அதிகரிக்க உள்ளது.

இது நூற்றுக்கு 144 வீத அதிகரிப்பாகும்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image