அரச ஊழியர்களின் ஆடை தொடர்பில் சுற்றுநிருபம்

அரச ஊழியர்களின் ஆடை தொடர்பில் சுற்றுநிருபம்

அரச உத்தியோகத்தர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகைதரும் போது அலுவலகத்திற்கு பொருத்தமான உடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட பொது நிர்வாக அமைச்சு தீர்மானித்துள்ளது.

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பிலான சுற்றுநிருபத்தினை தயாரிப்பதற்குரிய ஆலோசனை உரிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகைத்தரும் போது, பெண்கள் சேலையும், கர்ப்பிணி பெண்கள் அவர்களுக்கு பொருத்தமான உடையையும், அணிய வேண்டும் என சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஆண்களுக்கு வெள்ளை நிற மேற்சட்டையும், கருப்பு நிற காற்சட்டையையும் அலுவலக ஆடையாக பரிந்துரைக்கவும், சப்பாத்து அணிவதனை கட்டயாமாக்குவதற்கும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

மூலம் - சூரியன் எவ்.எம் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image