அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கான புதிய கடமை
14 ஆயிரத்து 22 கிராம சேவகர் பிரிவுகளையும், கிராமிய, பொருளாதார மற்றும் புத்தாக்கல் சக்தி கேந்திரமாக விரைவில் மேம்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைவான சுற்றறிக்கை, பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த கிராம சேவகர் பிரிவுகளில் சேவையில் ஈடுபடும். பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர், விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள், சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் உட்பட, கிராம மட்டத்தில் சேவை வழங்கும் அனைத்து அதிகாரிகளும் இந்த வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், கிராம மட்டத்தில் சேவையில் ஈடுபடும் கள உத்தியோகத்தர்களின் சிறந்த செயற்திறனைப் பெற்றுக்கொள்வதும் இந்தத் திட்டத்திற்கான காரணங்களாகும் என பொது நிர்வாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.