அவசரகால சட்டம் மூலம் அரச நிறுவனங்களை விற்பனை செய்ய அரசாங்க முயற்சி?

அவசரகால சட்டம் மூலம் அரச நிறுவனங்களை விற்பனை செய்ய அரசாங்க முயற்சி?

அவசரகால சட்டம் உள்ளிட்ட அடக்குமுறை சட்டங்களை பயன்படுத்தி அரச நிறுவனங்களை அரசாங்கம் விற்பனை செய்ய முயற்சிப்பதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

இதுகுறித்து அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சந்தன சூரிஆராய்ச்சி அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில், 

Chandana_Sooriarachi_small.jpg

ஐக்கிய மக்கள் சக்தியுடன் அண்மையில் நடத்திய சந்திப்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவசரகால சட்டம் உள்ளிட்ட சட்டங்களை மாற்ற முடியாது எனக் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பொருளாதார மறுசீரமைப்புகளுக்காக இந்த சட்டதிட்டங்கள் அவசியமாகும்.என ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார். சாதாரண சட்டங்களில் அவற்றைச் செய்ய முடியாது. சாதாரண சட்டத்தின் கீழ் சட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு சில வாரங்களில் எடுக்கும் என என்பதால் எதிர்காலத்திற்கான அவசியத்தன்மை கருதி அவசரகால சட்டம் உள்ளிட்ட சட்டங்களை வைத்துக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி அந்த சந்திப்பில் கூறியிருக்கின்றார்.

2001ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில் நாட்டிலுள்ள அரச நிறுவனங்கள் இலாபம் ஈட்டும் நிறுவனங்கள் அரச வளங்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளை திட்டமிட்டிருந்தார். அதன் காரணமாகவே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்குள் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது ராஜபக்ச குடும்பத்தின் தேவைக்காக மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளில் தெரிவான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்காலத்தில் பொருளாதார மறுசீரமைப்புகாக அடக்குமுறை சட்டதிட்டங்கள் அவசரகால சட்டம் அவசியம் என கூறுகின்றார். ஏன் இந்த சட்டங்கள் அவசியமாகின்றன? என்ன செய்யப் போகின்றீர்கள்? என நாங்கள் கேட்கின்றோம்.

நாட்டில் உள்ள 40 அரச நிறுவனங்கள் அரச கூட்டுத்தாபனங்கள் நட்டத்தில் இயங்குவதாக சர்வதேச நாணய நிதியம் கூறுகின்றது. அவற்றை விற்பனை செய்யவேண்டும் மாற்ற வேண்டுமென்று தெரிவித்திருக்கின்றது. எனவே இந்த நிறுவனங்கள் உதாரணமாக எடுத்துக்கொண்டால் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் அரச அதிகாரி ஒருவர் அல்ல. மின்சார சபை தலைவரும் அரச அதிகாரி அல்ல. இவ்வாறாக விற்பனை செய்ய ஏலமிட முயற்சிக்கும் தனியார் மயப்படுத்த முயற்சிக்கும் இந்த நிறுவனங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள் தலைவர்களாக அரசாங்கத்துக்கு வேண்டியவர்களும் ராஜபக்ச குடும்பத்தின் உறவினமே செய்யப்பட்டிருக்கின்றனர.

தொடர்ந்தும் இந்த அரச நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கியதாக இருந்தால் அது அரசு ஊழியர்களின் பிரச்சினை அல்ல. அரசியல் தேவை கருதி நியமனங்களை வழங்கபட்டவர்களின் செயல்பாடுகளின் காரணமாகவே நட்டம் ஏற்பட்டு இருக்கின்றது. எனவே அரசியல் நோக்கங்களுக்காக நபர்கள் நியமிக்கப்பட்டமை காரணமாகவே இவை இந்த நிறுவனங்கள் நட்டத்தில் ஏற்பட்டிருக்கின்றன. - என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image