நாடளாவிய ரீதியில் அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை, ஜூலை 04 முதல் 08 வரை விடுமுறை வாரமாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் அதிகாரிகள், மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுடன் (Zoom) வீடியோ அழைப்பு தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று (03) மேற்கொண்ட கலந்துரையாடலில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த இரண்டு வாரத்தில் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் வருகை தொடர்பில் ஆராய்ந்த பின்னர், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள எரிபொருள் விநியோகம் குறித்த அறிவிப்புகளை கவனத்தில் கொண்டு குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாரத்தில் இடம்பெறாத பாடசாலை நாட்களை பாடசாலை விடுமுறை காலத்தில் ஈடுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கல்வி அமைச்சின் சிங்கள மொழியிலான அறிவித்தல்