அரச சேவையில் ஆட்குறைப்பு திட்டத்தை நிறுத்த வலியுறுத்தல்

அரச சேவையில் ஆட்குறைப்பு திட்டத்தை நிறுத்த வலியுறுத்தல்

அரச சேவையில் ஆட்குறைப்பு செய்வதற்குள்ள திட்டத்தை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்ட விடயத்தை வலியுறுத்திய அந்த சங்கத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்க மேலும் தெரிவிக்கையில்.

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குதல் மற்றும் அரச ஊழியர்கள் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை வழங்குதல் என்பனவற்றின் பின்னணியில் அரச சேவையில் ஆட்குறைப்பு திட்டம் உள்ளதா என்று சந்தேகம் எழுகின்றது. நாங்கள் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு அல்ல. ஆனால் இதற்கு முறையான பேச்சுவார்த்தைகள் அவசியமாகும். முறையான போக்குவரத்து திட்டங்களுடன் வேலைக்கு அழைக்க வேண்டும். போக்குவரத்து கொடுப்பனவு அல்லாவிட்டால் மாதாந்த பருவச்சீட்டைக் கொடுத்தாவது ஒரு திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

மக்களின் பிறப்பு முதல் இறப்பு வரை அரச சேவை அவசியமாகும். இந்தநிலையில் மக்களுக்காக ஆற்றப்படும் சேவை தொடர்பில் நாங்கள் எங்களுடைய யோசனைகளை முன்வைத்தோம். இதுவரையில் இருந்த அமைச்சர்களும், செயலாளர்களும் ஒரு யோசனையும் எடுத்துக்கொள்ளவில்லை. முன்னாள் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி எந்த ஒரு பேச்சுவார்த்தையும் எங்களுக்கு வழங்கவில்லை. நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று நாங்கள் கூறுகின்றோம்.

லிட்ரோ எரிவாயு விலை மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம்

அரச ஊழியர்களுக்கு வௌிநாட்டு தொழில்வாய்ப்பு: தடைகளும் தீர்வுகளும்

மக்களுக்கு சேவை இலகுவாக கிடைக்கும் முறைமையை ஏற்படுத்த வேண்டும். அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு சேவைகளை ஒரு நாளில் பெற்றுக் கொள்ளக் கூடிய வசதியை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். ஏன் மாவட்ட மட்டத்தில் இவற்றுக்கான காரியங்களை திறக்க முடியாது? 25 மாவட்டங்களில் 25 மாவட்ட செயலாளர்கள் அலுவலகங்கள் உள்ளன. மக்கள் கிராமங்களிலிருந்து கொழும்புக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. இதுபோன்ற இலகுவான வழிமுறைகளை ஏற்படுத்த முடியும். இவ்வாறான வேலைத்திட்டத்திற்கு செல்ல வேண்டும். எனவே அரச சேவையில் ஆட்குறைப்பு செய்யும் திட்டத்தை நிறுத்த வேண்டும் என நாங்கள் அரசாங்கத்திடம் கூறுகின்றோம் - என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image