லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவர் முதித்த பீரிஸ் இன்று தனது கடமைகளை ஆரம்பித்தார்.
இதன்போது, லிட்ரோ நிறுவனத்தில் சிறந்த குழுவொன்று உள்ளதாகவும் அந்த குழுவுடன் இணைந்து தற்போதுள்ள சவாலை தம்மால் வெற்றிகொள்ள முடியும் என நம்புவதாகவும் முதித்த பீரிஸ் குறிப்பிட்டார்.
மேலும், முன்பிருந்தவர்கள் பொறுப்புடன் செயற்பட்டிருந்தால், விநியோகஸ்தர்களை தொடர்கொண்டு, எரிவாயு கப்பல்களுக்கான திகதியை நிர்ணயித்திருக்க முடியும் என சுட்டிக்காட்டினார்.
லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பை எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர், 200 அல்லது 210 ரூபா அதிகரிப்பினை கோரியுள்ளதாகவும் கூறினார்.
நியூஸ்பெஸ்ட்