விசேட கலந்துரையாடலுக்காக அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கங்களுக்கு பொது நிர்வாக அமைச்சு அழைப்பு
பிரதேச நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் நாளை (03) பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடல் நாளை 3ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம் எம் பி கே மாயாதுன்னேவின் தலைமையில் அமைச்சின் கட்டிடத் தொகுதியில் 19 ஆம் மாடியில் இடம்பெற உள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் (உள்நாட்டு அலுவல்கள்) கே.பி.தர்மதிலக நேற்று (01) கடிதம் மூலம் அறியப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதிக்கும், தொழில் வல்லுநர் குழுக்களுக்கும் இடையே சந்திப்பு!
தனியார் பஸ் சேவைகளை இடைநிறுத்த தீர்மானம்!
இதன்படி,
முற்போக்கு பொருளாதார உத்தியோகத்தர் சங்கம்
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
அகில இலங்கை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம்
அரச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம்
ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம்
ஆகியவற்றின் செயலாளருக்கு இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது