நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் நேற்றிரவு (20) முதல் இரத்தாகியுள்ளது.
கடந்த 6ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.
அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதும் நடைமுறைப்படுத்துவதும் நாடாளுமன்ற சட்ட விதிகளுக்கு உட்பட்ட நிலையில், அது நிறைவேற்றப்பட்ட 14 நாட்களுக்குள் ஜனாதிபதியால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
எனினும், 14 நாட்களுக்கு மேலாகியும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் அது இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் நேற்று நள்ளிரவுக்குப் பின்னர் நீக்கப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
சூரியன் செய்திகள்