நேற்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், பொதுமக்கள் அவசர நிலையை நீக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் பொதுமக்கள் அவசர கால நிலை பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.
அவசரகால நிலையை நீக்குமாறு வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்த நிலையில், நேற்று (05) பாராளுமன்றத்திலும் இது தொடர்பில் நேற்று கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.