பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிரதமர் ஊடகப் பிரிவு இது குறித்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியுள்ளதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்.
பிரதமர் பதவி விலகியுள்ளதாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அடிப்பயைற்றவையாகும். அத்துடன் அவ்வாறானதொரு திட்டம் இல்லை என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பிரதமர் ஊடக பிரிவு