தடுப்பூசி தொடர்பான சுகாதார அமைச்சின் வர்த்தமானிக்கு எதிரான மனு நிராகரிப்பு
பொது இடங்களுக்கு செல்லும்போது, முழுமையாக தடுப்பூசி ஏற்றியிருப்பதை கட்டாயப்படுத்தும் நிபந்தனையை உள்ளடக்கி சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்ட வர்த்தமானியை வலுவிழக்கசெய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தில் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமில் பொரும்பான்மையானோரின் இணக்கப்பாட்டிற்கு அமைய குறித்த மனு நிராகரிக்கப்பட்டது.
அதற்கமைய, கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானியின் பிரகாரம், ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு பின்னர் பொது இடங்களுக்கு செல்லும் போது முழுமையான தடுப்பூசியை பெற்றிருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நியூஸ்பெஸ்ட்
மத்திய கிழக்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் இலங்கைப் பெண்கள்