பொருளாதார நெருக்கடி மற்றும் தோல்வியுற்ற நிர்வாகத்திற்கு மத்தியில், மக்கள் எதிர்நோக்கும் துன்பங்கள் மற்றும் அடக்குமுறைக்கு எதிராக என்ன செய்ய வேண்டும்? என்பது தொடர்பான கலந்துரையாடல், இலங்கை வர்த்தக, கைத்தொழில் பொது ஊழியர்கள் சங்கத்தின் (CMU) இல் நேற்று (29) இடம்பெற்றது.
விவசாயிகள், மீனவர்கள், ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவிலான பிரதிநிதிகள் இதில் பங்கேற்றிருந்தனர்.
கணக்காய்வு சேவை சங்கத்தின் சார்பில் பிரசன்னமாகியிருந்த எச்.எம்.கே.ஹேரத், தற்போதைய பொருளாதார நெருக்கடியின் தோற்றம் குறித்து பகுப்பாய்வு விளக்கமொன்றை வழங்கினார். இலங்கையின் பொருளாதாரம் மற்றும் உற்பத்தியின் நடத்தை பற்றிய தரவுகளைப் பயன்படுத்தி கடந்த காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் அந்த மாற்றங்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு எவ்வாறு வழிவகுத்தன என்பதை விளக்கப்படுத்தினார். பொருளாதார நெருக்கடியில் மக்கள் தவிக்கும் இவ்வேளையில் சட்டத்தின் ஆட்சி, நீதித்துறையின் சுதந்திரம், மனித உரிமைகள், ஜனநாயகம் என்பவற்றில் செல்வாக்கு செலுத்தி மக்கள் எழுச்சியை அடக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும், இதன் மூலம் இந்தப் பிரச்சினையின் உண்மையான தோற்றத்தை மறைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, அங்கிருந்த ஏனைய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் தலைவர்கள் தமது கருத்துக்களை தெரிவித்தனர். இதற்கிணங்க இப்பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் யோசனை முன்வைக்கும் இவ்வேளையில் தொழிற்சங்க இயக்கம் என்ற ரீதியில் நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இ.மி.ச புதிய ஊழியர் சங்கத்தின் செயலாளர் பிரியந்த விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானங்களை அமுல்படுத்துவதன் மூலம் கிரேக்கத்தில் தொழிலாள வர்க்கத்தையும், தொழிற்சங்க இயக்கத்தையும் முடக்க முடிந்தது என்பதை நினைவிற்கொண்டு, இந்த நாட்டின் தொழிற்சங்க நடவடிக்கையானது அவதானத்துடன் இருக்க வேண்டியதை, சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகள் எதிர்காலத்தில் ஏற்படுத்தும் அவர் விளக்கமளித்தார்.
தற்போதைய தருணம் நாட்டின் தொழிற்சங்க வரலாற்றில் ஒரு திருப்புமுனை எனவும், தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து பாரிய வேலைத்திட்டத்தை உருவாக்குவதன் மூலமே இந்த தருணத்திர் வெற்றியடைய முடியும் என தொழிலாளர் போராட்ட மையத்தின் சார்பில் கலந்து கொண்ட துமிந்த நாகமுவ தெரிவித்தார். இதற்காக, தொழிற்சங்க இயக்கத்தை பரந்த அளவில் ஒழுங்கமைப்பதன் முக்கியத்துவம் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இலங்கை வர்த்தக, கைத்தொழில் மற்றும் பொது ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் சில்வெஸ்டர் ஜயக்கொடி இதன்போது கருத்து தெரிவிக்கையில், தற்போதைய நெருக்கடி நிலையை, கேளிக்கு உள்ளாக்காமல், இந்த நெருக்கடியை யதார்த்தமாக ஏற்றுக்கொள்ள சமூகத்தை வழிநடத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
ஆதன் உண்மையான நடவடிக்கை தொழிற்சங்க இயக்கங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்தனர.
பு;ரொடெக்ட் சங்கத்தின் பொதுச் செயலாளர் கல்ப மதுரங்க கருத்துத் தெரிவிக்கையில், தொழிற்சங்க இயக்கம் கடந்த காலங்களில் அரசியல் அடிப்படை இல்லாததாலும், புதிய லிபரல்வாத குழுக்களுடன் இணைந்ததாலும், பலவீனமடைந்ததாகத் தோன்றினாலும், இப்போது மீண்டும் வலுவாக நிற்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக குறிப்பிட்டார்.
அதற்காக தொழிற்சங்கங்கள் பாரிய வேலைத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். 25 சதவீத மிகைவரி சட்டத்தின்மூலம் கொள்ளையடிக்க முடியாத தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு நிதியை புதிய சுற்றில் கொள்ளையடிக்க அரசாங்கம் தயாராகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நெருக்கடியிலிருந்து தொழிலாளர்களையும், மக்களையும் மீட்பதில் தொழிற்சங்கங்களுக்கு பெரும் பங்கு உள்ளது என்றும், விரைவில் தொழிற்சங்கங்களை ஒன்றிணைக்கும் பாரிய வேலைத்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்றும் கலந்துரையாடலில கலந்துகொண்ட அனைத்து தொழிற்சங்கங்களின் இறுதிப் பரிந்துரையாகும்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராகவும், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு எதிராகவும் மற்றும் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரித்தல் முதலான விடயங்களை நோக்கமாகக் கொண்டு, பொது விழிப்புணர்வு, போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் போன்ற செயற்பாடுகள் வரையில் விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்களின் தலைவர்களது யோசனையாக இருந்தது.