தொழிற்சங்கங்கள் இன்று இயங்க முடியாத நிலை - அரவிந்த குமார்

தொழிற்சங்கங்கள் இன்று இயங்க முடியாத நிலை - அரவிந்த குமார்

தொழிற்சங்கங்கள் இன்று இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.


பண்டாரவளையில் அண்மையில் இடம் பெற்ற நிகழ்வில் இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
இன்று தொழிற்சங்கங்கள் இயங்காமல் முடிங்கி போய் இருக்கினறன. தொழிற் சங்கங்களை முடக்கும் பாணியில் தோட்ட நிர்வாகங்கள் அழகாக காய் நகர்த்துவதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.
ஏனெனில் தொழிற்சங்கங்கள் இயங்கினால் அவை தோட்ட நிர்வாகங்களின் செயற்பாடுகளுக்கு தடையாக இருக்கும் என்ற காரணத்தினால் இன்று தொழிற்சங்க செயற்பாடுகளை முடக்குவதற்கான முதற் கட்ட நடவடிக்கையாக தோட்ட தொழிலாளர்களிடம் இருந்து சந்தா அறவிட்டு தொழிற்சங்கங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைளை தோட்ட நிர்வாகங்கள் நிறுத்தி இருக்கின்றன.
இவ்வாறு சந்தா அறிவிடுவதை தோட்ட நிர்வாகங்கள் நிருத்தி இருப்பதன் காரணமாக தொழிற்சங்க காரியாலய உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலைமை, தொழிற்சங்க காரியாலயங்களுக்கு வாடகை செலுத்த முடியாத நிலைமை, காரியலயத்தை இயக்க முடியாத நிலைமை என்று பல்வேறு மோசகரமான நிலைமை இப்போது ஏற்பட்டு இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image